ரஜினியும் கமலும் தெருவிற்கு வர வேண்டும் - துரைமுருகன் பேட்டி

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (12:59 IST)
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது பற்றி திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தனிக்கட்சி தொடங்கி அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
மறுபுறம் தானும் அரசியலுக்கு வருவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் “ அவர்கள் தெருவுக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை புரியும். இப்போது அவர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பதில் கூறமுடியாது. அரசியலுக்கு வந்த பின் பொதுமக்கள் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவை கண்ட பின்பே கருத்து கூற முடியும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments