Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் வங்கியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்!

J.Durai
வெள்ளி, 21 ஜூன் 2024 (11:28 IST)
எட்டுக்குடியில் உள்ள இந்தியன் வங்கியில் அப்பக்குதியைச் சேர்ந்த ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கணக்கு வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் சுய உதவிக்குழு  மூலம் கடன் பெற்ற பெண்களின், தனி நபர் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை அவர்களுக்கு தெரியாமலே அவர்களை கேட்காமலேயே இந்தியன் வங்கி நிர்வாகம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் சுய உதவிக்குழு மூலம் கடன்பெற்ற  பெண்களின் வங்கிக் கணக்கையும் இந்தியன் வங்கி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் பயனாளிகள் 100 நாள் ஊதியம் எடுப்பது உட்பட வங்கிச் செயல்பாடுகளில் ஈடுபட முடியவில்லை என்று குற்றம்சாட்டி,  இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில் எட்டுக்குடி இந்தியன் வங்கி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வீ. மாரிமுத்து, சட்ட பேரவை உறுப்பினர் வி.பி.நாகை.மாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments