Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரன் - ஓபிஎஸ் இடையே காரசார விவாதம்: வரிந்துகட்டி இறங்கிய தங்கமணி!

தினகரன் - ஓபிஎஸ் இடையே காரசார விவாதம்: வரிந்துகட்டி இறங்கிய தங்கமணி!
, புதன், 10 ஜனவரி 2018 (13:54 IST)
தமிழக சட்டசபையில் தினகரன் தனி ஆளாக எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணிக்கு எதிராக சுயேட்சையாக சென்றுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
தினகரனின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நிச்சயமாக எடப்பாடி தரப்புக்கு எதிராக தீவிரமாக சட்டசபையில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாள் ஆளுநர் உரை நடந்தது, இரண்டாம் நாள் தினகரனுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது, இதனால் அவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
 
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று முதன்முறையாக தினகரன் தரப்புக்கும் ஆளும் தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. சுமார் அரை மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது. அதிமுக பெரும்பான்மை குறித்தும், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்தும் இந்த விவாதம் நடைபெற்றது.
 
அன்மையில் ஊடக பேட்டி ஒன்றில் தங்கமணி பாஜக உடன் கூட்டணியில் இருப்பதாக தினகரன் கூறியிருந்தார். அதனால் ஓபிஎஸ் உடன் தங்கமணியும் இணைந்து தினகரனுக்கு எதிராக வாதம் செய்தார். அப்போது சபாநாயகர் தனபால் குறுகிட்டு, அரசியல் தொடர்பான கருத்துக்களை சட்டசபையில் விவாதிக்க வேண்டாம் என முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் இந்த அரை மணி நேர விவாதமும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது தோல்விக்கு அமைச்சர் ஜெயக்குமாரே காரணம் - மதுசூதனன் மறைமுக குற்றச்சாட்டு