டிட்வா புயல்: 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் விடுமுறை அறிவிப்பு!

Mahendran
வெள்ளி, 28 நவம்பர் 2025 (11:39 IST)
வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் வலுப்பெற்றுள்ள 'டிட்வா' புயலின் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களை நோக்கிப் புயல் நகரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
 
அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியத்திலிருந்து  விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் முதல் அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments