Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து! பிபின் ராவத் நிலைமை என்ன? – குன்னூர் விரைகிறார் ராஜ்நாத் சிங்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (14:38 IST)
முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான நிலையில் சம்பவ இடத்திற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

அதில் முப்படை தளபதி பிபின் ராவத்தும் பயணம் செய்துள்ளார். இந்த விபத்தில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட 4 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது. பல உடல்கள் எரிந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து மத்திய அமைச்சரவை அவசரமாக கூட்டப்பட்டுள்ளது. அங்கு பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து குறித்து விளக்கமளித்து வருகிறார். தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து நடந்த குன்னூருக்கு நேரில் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments