Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.. நிவாரண பொருட்களை வழங்கினார்..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (13:14 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அந்தோணியார்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார் என்றும், அதன்பின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது,.
 
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின் 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிடுகிறார். அதன்பின் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 முன்னதாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது அடுத்து ஏராளமான சேதம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் ஆடு மாடுகள் கோழிகள் என பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருந்த விலங்குகள் அடித்து செல்லப்பட்டன.
 
அதுமட்டுமின்றி கடைகளுக்குள் நீர் புகுந்ததால் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments