முதல்வருக்கு பக்தி இல்லை.. அதனால் முருகர் மாநாடு நடத்துகிறோம்: நயினார் நாகேந்திரன்

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (10:34 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பக்தி இல்லாததால்தான்  முருகன் பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது," என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
 
அவர் மேலும் பேசுகையில்:
 
அரசியல்வாதிகளுக்கும் ஆன்மீகம் இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. 'நான் சாமி கும்பிடக் கூடாது' என்று யாராவது சொல்ல முடியுமா? இந்த மாநாட்டு திடலில் அரசியலை அதிகமாக பேச விரும்பவில்லை. எனவே, பக்தி மற்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசுவோம்.
 
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு, அவர்கள் ஏன் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருகிறார்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். நான் ஊடகங்கள் வாயிலாக அவரிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்: 'ஆந்திரத்திலிருந்து இங்கு வந்து சாமி தரிசனம் செய்யக் கூடாதா?'
 
ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று பேசுபவர்களிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன்: இப்போது ஒன்றும் தேர்தல் நடைபெறவில்லையே? நாங்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் வாக்குகள் கேட்கவில்லையே!
 
திமுக ஆட்சியில் ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு பக்தி இல்லை. அதனால்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் நடத்திய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது," என்று நயினார் நாகேந்திரன் ஆவேசமாக பேசினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments