Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (21:38 IST)
மழை நீர்வடிகால் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்த புதிய தலைமுறை பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறப்புக்கு  முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 சென்னை எம்.ஜி.ஆர்  நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து  வருகிறது.

இந்த நிலையில்,  நேற்றிரவு பணி முடிந்து திரும்பும்போது  மழை நீர்வடிகால் பள்ளத்தில் விழுந்த தலைமுறை பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உடலில்  பள்ளத்தில் இருந்த கம்பிகள் குத்தி பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து, அவர் ராயப்பேட்டை அரசு,  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துகிருஷ்ணன் உயிரிப்புக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு அவரது குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மழை நீர் வடிகாலில் விழுந்து பலியான முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments