சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

Siva
ஞாயிறு, 7 டிசம்பர் 2025 (14:38 IST)
சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த சுற்று பருவமழை டிசம்பர் 9ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சாதகமான கடல் நிலைகள் காரணமாக, டிசம்பர் மாதம் முழுவதும் இயல்புக்கு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரை கிழக்கிலிருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த சுற்று மழை துவங்கும். குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 10 அல்லது 11 ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
 
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் அடுத்தடுத்து தாழ்வுப்பகுதிகள் உருவாகி பருவமழையைத் தீவிரப்படுத்தும். மேலும், டிசம்பர் நான்காவது வாரத்தில் தென் வங்கக்கடலில் உருவாகும் தாழ்வுப்பகுதி புயல் சின்னமாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
ஒட்டுமொத்தமாக, வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments