Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 17 சுரங்கப் பாதைகள் மூடப்படுவதாக காவல்துறை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (13:53 IST)
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளனர்.  இதுவரை வரலாறு காணாத அளவுக்கு 34 செமீ மழை பெய்துள்ள நிலையில் இன்று மாலை வரை மழை பெய்யும் என்பதால் இன்னும் வெள்ளம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் நாளை காலை நெல்லூர் பகுதி அருகே கரையைக் கடப்பதால் மாலை முதல் படிப்படியாக மழை தமிழகத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த மழை காரணமாக சென்னையின் தாழ்வான பகுதிகள் பல வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் 17 சுரங்கப் பாதைகளை மூடவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. பல சுரங்கப் பாதைகள் மழைநீரால் மூழ்கி உள்ள நிலையில் இந்த அறிவிப்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments