Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்: எந்தெந்த நிலையங்களுக்கு என்னென்ன பெயர்?

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (09:37 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த  நிலையில் சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம்‌ என்று பெயரிட்டதைப்‌ போல்‌, ஆலந்தூர்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு “அறிஞர்‌ அண்ணா ஆலந்தூர்‌ மெட்ரோ” என்றும், சென்னை சென்ட்ரல்‌ இரயில்‌ நிலையத்திற்கு 'புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ மத்திய இரயில்‌ நிலையம்‌' என்று பெயர்‌ வைத்ததைப்‌ போல சென்ட்ரல்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி‌ தலைவர்‌ டாக்டர்‌
எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ என்றும்‌, மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ ஆசியாவில்‌ மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர்‌ பேருந்து நிலையத்தையும்‌, அங்கு:
அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும்‌ திறந்து வைத்ததாலும்‌, சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும்‌ வகையில்‌, புறநகர்‌ பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்தை புரட்சித்‌ தலைவி டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா மெட்ரோ என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது
 
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments