Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்; டி.டி.வி.தினகரன்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (08:37 IST)
பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. 
 
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
 
இதுகுறித்து பேசிய டி.டி.வி தினகரன் நிதி நெருக்கடியால் தான் இந்த கட்டண உயர்வு என்று ஆட்சியாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது. சேவை நோக்கத்தோடு இயங்கும் போக்குவரத்து கழகங்களின் அடிப்படையையே சிதைத்து  சுமையை மக்கள் தலையில் கட்டி விட்டனர். போக்குவரத்து கழகத்தின் நிதி நெருக்கடியை போக்க மாற்று வழியை கண்டறியாமல் மக்கள் மீது பாரத்தை ஏற்றியுள்ளனர். எம்.எல்.ஏ க்களுக்கான சம்பள உயர்வை நான் பெறப்போவதில்லை, எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தமிழக பிரஜைகள் போலவும், பொதுமக்கள் இந்த அரசுக்கு தேவையற்றவர்கள் போலவும் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றனர். பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்த தினகரன், உயர்த்திய பஸ் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments