Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் பாரதிராஜா, அமீர் கைது

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (09:33 IST)
இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில் விமான நிலையத்தில் பல்வேறு கட்சி தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கூடி மோடியின் வருகைக்கு எதிராக கோஷமிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே தங்கள் ஆதரவாளர்களுடன் பிரதமருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாமல் உள்ளது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் உள்பட தமிழகத்தின் பிரச்சனைகள் அனைத்தையும் என்று தீர்க்கப்படுகிறதோ, அன்று தமிழகம் வாருங்கள், நாங்களே பச்சைக்கொடி காட்டி வரவேற்கின்றோம், அதுவரை தமிழகத்திற்கு நீங்கள் வரவேண்டாம், திரும்பி போய்விடுங்கள் என்று பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கோஷமிட்டனர். இந்த நிலையில் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 
 
இந்த நிலையில் இன்னொரு புறம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் விமான நிலையத்தில் போர்டுகளில் ஏறி போராட்டம் செய்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments