அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

Prasanth K
சனி, 21 ஜூன் 2025 (15:57 IST)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த வழக்கில் அண்ணாமலையை விசாரிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்ந்து நடைபெற்று இறுதியில் அவர் குற்றவாளி என நிரூபணமானதுடன், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் இந்த வழக்கில் பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி அளித்த அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஞானசேகரன் யார் யாரிடம் போனில் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சொன்ன அண்ணாமலை, அவற்றை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கவில்லை என்றும் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்