அன்புமணி மு.க.ஸ்டாலின் போல இருக்க வேண்டும்! சூசகமாக சொன்ன ராமதாஸ்!

Prasanth K
வியாழன், 26 ஜூன் 2025 (11:08 IST)

பாமகவில் தொடர்ந்து ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்டு வரும் முரண்பாடுகளால் கட்சியினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திக்கும் ராமதாஸ் நானே கட்சியின் தலைவர் என கூறி வருகிறார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “அன்புமணி மன்னிப்பு கேட்பது பற்றி பிரச்சினையில்லை. நான் தொடங்கிய கட்சியில் நான் சொல்லும்படிதான் நடக்க வேண்டும். என்னோடு தொடக்கத்தில் இருந்தே கட்சிக்காக பயணித்தவர்களுக்கு பதவி அளித்திருக்கிறேன். கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர். அன்புமணி செயல் தலைவர்தான். கலைஞர் திமுக தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. அவரது சொல் கேட்டு நடந்தார்.

 

பாமகவில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. நான் நியமித்த அனைவருமே நிரந்தர பொறுப்பாளர்கள். போஸ்டர்களை கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல” என்று பேசியுள்ளார்.

 

மேலும் தனது 60வது மணி விழாவிற்கு அன்புமணி வராதது குறித்து வருத்தம் தெரிவித்து பேசியுள்ளார் ராமதாஸ்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments