2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

Mahendran
செவ்வாய், 9 டிசம்பர் 2025 (10:37 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரடி அரசியல் சவால் விடுத்துள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைவிட்டு முற்றிலும் துடைத்தெறியப்படும் என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
 
2014 முதல் தொடர்ந்து பாஜகவின் வெற்றியை சுட்டிக்காட்டிய அமித்ஷா, எதிர்க்கட்சிகளுக்கு தலைமை மற்றும் கொள்கைகள் இல்லை என்று விமர்சித்தார். அவர் மேடையில் இருந்தபடியே மம்தா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு சவால் விடுத்தார்.
 
மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, தமிழகத்தில் தி.மு.க. துடைத்தெறியப்படும்," என்று அவர் உறுதியுடன் கூறினார்.
 
அமித்ஷாவின் இந்த ஆவேச பேச்சு, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் வந்துள்ளது. விரைவில் அவர் தமிழகம் வர உள்ள சூழலில், முதல்வர் ஸ்டாலினின் பெயரை குறிப்பிட்டு அவர் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments