விஜய் கூட்டத்திற்கு நிபந்தனைகள்: ஆம்புலன்ஸுக்கு வழிவிட வேண்டும் - காவல்துறை உத்தரவு!

Siva
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (20:30 IST)
கரூரில் நாளை நடைபெற உள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதில், "ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும், முதலுதவி சிகிச்சைக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும்" என்பது முக்கிய நிபந்தனைகளாகும். 
 
மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்சார வாரியத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்றும், கூட்டத்தை நடத்த தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சியிடம் பதாகைகள், பேனர்கள் தொடர்பான அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கூட்டம் முடிந்ததும் கொடிகள் மற்றும் பேனர்களை அகற்ற வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் எல்.இ.டி திரை மற்றும் மேடை அமைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments