தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (13:38 IST)
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுமேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments