Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு முழுதும் கண்காணிப்பு, சோதனை தீவிரம்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2010 (14:52 IST)
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக லாரிகள் கடுமையான சோதனைக்குள்ளாகி வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச அரங்கில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் வெடிபொருட்கள் நிரம்பிய லாரிகளை இந்தியாவில் ஆங்காங்கே தயார் நிலையில் வைத்துள்ளதாக வந்துள்ள தக்வல்களை அடுத்து தமிழகத்திலும் லாரி சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெடிபொருள் நிரப்பிய லாரிகள் மூலம் தாக்குதல் அபாயம் உள்ளதாக கூறப் படுவதால், தமிழ்நாடு முழுவதும் லாரிகள் கண்காணிக் கப்படுவதாக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் கூறியுள்ளார். அவர் உத்தரவின் பேரில் சந்தேகப்படும் லாரிகள் நிறுத் தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 80 இடங் களில் வாகன சோதனை நடந்து வருகிறது. இன்றிரவு 1.30 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண் டாட்டம் என்ற பெயரில் இன்றிரவு வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது. விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச்சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித் துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

Show comments