தமிழ்நாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை ஜனவரி 5ஆம் தேதிக்குள் முடிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளம் பாதித்த 9 மாவ்வட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு நடத்தி சேத விவரங்களை திரட்டியுள்ளனர்.
இவர்களுடன் தொலைமாநாட்டின் மூலம் தொடர்பு கொண்ட முதல்வர் கருணாநிதி வெள்ளநிவாரணப்பணிகள் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட வெள்ளம் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
வெள்ள நிவாரணப்பணிகளில் சுணக்கம் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றஞ்சாற்றி வருவதால் முதல்வர் கருணாநிதி 5ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.