சேலம் மக்களவை தொகுதியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு போட்டியிட பத்து பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை இன்று முதல் அளிக்கலாம் என கட்சியின் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று கூறினார்.
அதன்படி இன்று விருப்ப மனுக்கள் விநியோகம், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது. முதல் நாளான இன்று 2 மணி நேரத்தில் 400க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
நெல்லைத் தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன், மயிலை பெரியசாமி உள்பட பலர் மனு பெற்றனர்.
சேலம் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு போட்டியிட 10 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், விருதுநகர், கடலூர் ஆகிய தொகுதிகள் கேட்டு ஏராளமானோர் விருப்ப மனு பெற்றுக் கொண்டனர்.
விருப்ப மனு விநியோகம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 400க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.