இந்த ஆண்டு 4.000 காவலர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப ்பேரவையில் கூறினார்.
webdunia photo
FILE
ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவல் துறையில் 16617 காலி இடம் இருப்பதாகவும் அவற்றை நிரப்பவில்லை என்றும் உறுப்பினர் ஜெயகுமார் கூறினார். 2008-2009ல் அறிவிக்கப்பட்டபடி 4000 பேர் நியமனத்துக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது.
கருணை அடிப்படையில் 310 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மேலும் 4000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். உதவி காவல் ஆய்வாளர்கள் 755 பேர் அறிவிக்கப்பட்டு 742 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பதர் சையத் கூறினார்.
3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் தேர்வாணையத்தால் இஸ்லாமியர்களில் உரிமையியல் நீதிபதிகள், மருத்துவர ்கள் என பல்வேறு பிரிவுகளில் 183 பேரும், ஆசிரியர் வாரியம் மூலம் 283 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இடஒதுக்கீட்டிற்கு முன்பு 2006ல் நடந்த நியமனத்தால் ஆண்கள் 18 பேரும் பெண்கள் 4 பேரும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பொறியியல் கல்வியில் 2564 பேரும், மருத்துவக் கல்வியில் 79 பேரும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது எப்படி உறுப்பினருக்கு தெரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.