Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1,530 கோடி‌ துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்ட‌ம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (20:11 IST)
ரூ.1,530 கோடி‌ ம‌தி‌ப்‌பிலான சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 18.3 க ி. ம ீ. நீளமுள்ள நான்குவழி பறக்கும் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (பகுதி 7) பொது - தனியார் கூட்டு முயற்சியின் அடிப்படையில் பல்வேறு சுற்றுச் சாலைகள், புறவழிச்சாலைகள், மேம்பாலங்கள், பறக்கும் சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சர்வீஸ் சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்தின் வாயில் எண்-10‌ ல் இர ுந்து மதுரவாயல் வரை (என ். எச ். 4) 18.3 க ி. ம ீ. நான்கு வழி பறக்கும் சாலை அமைப்பதற்காக மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த பறக்கும் சாலைக்காக நில ஆர்ஜிதம், புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் தமிழக அரசு இணைந்து 50 : 50 அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இதில் முதலில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் முழு நிதிச் செலவையும் ஏற்றுக் கொள்வது என்றும் தொடர்ந்து அதில் 50 ‌ விழு‌க்காடு தொகையை தமிழக அரசு திருப்பி தருவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் எந்தவித போக்குவரத்து இடையூறின்றி சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நகரின் உள்புற போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக சென்னை துறைமுகத்தை சென்றடையலாம்.

இந்த பறக்கும் சாலை மூலம் மேற்கு (என ். எச ். 4) மற்றும் தெற்கு (என ். எச ். 45) பகுதியில் இருந்து துறைமுகத்திற்கென ஒரு தனிச் சாலை கிடைக்கும். இந்த புதிய சாலை துறைமுக நுழைவு வாயில் எண் 10-ன் அருகில் துவங்கி கூவம் ஆறு வழியாக கோயம்பேடு வரையும், தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் அருகில் உயர்த்தப்பட்ட சாலையாகவும் மெட்ரோ ரயில் பாதையை கடந்து மதுரவாயலில் முடிவடையும்.

இந்தச் சாலை மொத்தம் 19 கிமீ இருக்கும். மேலும் பொது போக்குவரத்திற்காக நுழைவு மற்றும் வெளியே வரும் வழிகள் காமராஜர் சாலை (வெளியே), சிவானந்தா சாலை (உள்ளே), காலேஜ் சாலை (உள்ளே) மற்றும் ஸ்பர்டேங்க் சாலை (வெளியே) ஆகிய வசதிகளும் இந்த திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டம் வடிவமைத்து, உருவாக்கி, நிதி முதலீடு செய்து, செயல்படுத்தி ஒப்படைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறையில் வடிவமைப்பு திறனின் அடிப்படையில் 15 ஆண்டுகால சலுகை காலத்திற்கு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.1,530 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதில் நில ஆர்ஜிதத்திற்கான நஷ்டஈடு, புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்காக ரூ.3.10 கோடியும் அடங்கும். இதில் திட்டச் செலவில், 40 ‌‌ விழு‌க்கா‌ட்டி‌‌ற்கு‌ம் அதிகமாகாமல் இடைக்கால நிதியாக மட்டுமே மத்திய அரசு வழங்கும்.

இந்த பறக்கும் சாலை திட்டம் தற்போது கோயம்பேடு, மதுரவாயல ், சென்னை புறவழிச்சாலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளுடன் மிகச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு நிறைவேறும். தவிர போக்குவரத்து நெரிசல் நிறைந்த கோயம்பேடு மதுரவாயில் வரையிலான 4 க ி. ம ீ. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் கூடிய எட்டு வழிச்சாலை வசதியும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள புதிய சாலை நுழைவு வரி விதிகளின்படி இந்த பறக்கும் சாலைக்கும் நுழைவு வரி நிர்ணயிக்கப்படும். இன்னும் 3 ஆ‌ண்டுகளு‌க்கு‌ள் இந்த திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments