Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.நகரில் 29ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (18:15 IST)
செ‌ன்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலை - வாணி மகால் சந்திப்பில் புதிய பாலம் ‌திற‌க்க‌ப்படுவதா‌ல் வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌தி.நக‌ரி‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து சென்னை மாநகர போக்குவரத்து காவ‌ல்துறை வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்‌பி‌ல், "தி.நகர் ஜி.என். செட்டி சாலை - வாணி மகால் சந்திப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. வரும் 29ஆ‌ம் தேதி இந்த பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். அன்று முதல் அங்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

தியாகராய சாலையில் செல்லும் வாகனங்கள் :

அண்ணா சாலை - தியாகராய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், தியாகராய சாலை ரெசிடன்சி டவர் சந்திப்பில் வடக்கு போக் சாலை நோக்கி வலது புறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

பனகல் பூங்காவில் இருந்து தியாகராய சாலை சாலை வழியாக அண்ணா சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள், மேற்படி சந்திப்பில் தெற்கு போக் சாலையை நோக்கி வலது புறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலை தியாகராய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், டாக்டர் நாயர் சாலையை நோக்கி வலது புறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. பனகல் பூங்காவில் இருந்து தியாகராய சாலை வழியாக அண்ணா சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள், தணிகாசலம் சாலையை நோக்கி வலது புறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இருந்து தியாகராய சாலை வழியாக ரெசிடன்சி டவர் சந்திப்பில் வடக்கு போக் சாலையை நோக்கி வலது புறம் திரும்பும் வாகனங்களும், டாக்டர் நாயர் சாலையை நோக்கி வலது புறம் திரும்பும் வாகனங்களும், நேராக அண்ணா சாலை விஜயராகவா சந்திப்பை அடைந்து இடது புறம் திரும்பி, செவாலியே சிவாஜிகணேசன் சாலை அல்லது நேராக சென்று டாக்டர் நாயர் சாலையை அடையலாம்.

ஜி.என்.செட்டி சாலை, டாக்டர் நாயர் சாலை, திருமலை பிள்ளை சாலை போக்குவரத்தில் செய்யப்படும் மாற்றங்கள் :

ஜி.என். செட்டி சாலையில் பனகல் பூங்காவில் இருந்து சுந்தர் சாலையை நோக்கி செல்லும் வாகனங்களும், சுந்தர் சாலையில் இருந்து பனகல் பூங்காவை நோக்கி செல்லும் வாகனங்களும், புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

சுந்தர் சாலையில் இருந்து மேற்கு பகுதி சர்வீஸ் சாலை வழியாக வாணி மகால் சந்திப்பை (மேம்பாலத்தின் கீழ் பகுதி) அடையும் வாகனங்கள் வலது புறம் திரும்பி திருமலை பிள்ளை சாலையையும், இடது புறம் திரும்பி டாக்டர் நாயர் சாலையையும், நேராக சென்று பனகல் பூங்காவையும் அடையலாம்.

பனகல் பூங்காவில் இருந்து ஜி.என்.செட்டி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் கிழக்கு புற சர்வீஸ் சாலையை பயன்படுத்தி மேம்பாலத்தின் கீழ் பகுதியில், அதாவது வாணி மகால் சந்திப்பை அடைந்து இடது புறம் திரும்பி திருமலை பிள்ளை சாலையையும், வலது புறம் திரும்பி டாக்டர் நாயர் சாலையையும், நேராக சென்று ஜி.என்.செட்டி சாலை - போக் சாலை சந்திப்பை அடையலாம்.

டாக்டர் நாயர் சாலையில் இருந்து வாணி மகால் சந்திப்பை அடையும் வாகனங்கள் மேற்கு புற சர்வீஸ் சாலையை பயன்படுத்தி பனகல் பூங்காவையோ, வலது புறம் திரும்பி கிழக்கு புற சர்வீஸ் சாலை வழியாக சுந்தர் சாலையையோ அல்லது நேராக சென்று திருமலை பிள்ளை சாலையையோ அடையலாம்.

திருமலை பிள்ளை சாலையில் அமலில் உள்ள ஒரு வழி போக்குவரத்து தொடர்ந்து அமலில் இருக்கும். டாக்டர் நாயர் சாலையில் இருந்து வள்ளுவர் கோட்டத்தை நோக்கி செல்லும் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து அனுமதிக்கப்படும ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments