' சென்னை சங்கமம்' நிகழ்ச்சி ஜனவரி 10 ஆம் தேதி ம ுதல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் இதனை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார் என்றும் மாநிலங்களவை உறுப்பினரும், கவி ஞருமான கனிமொழி தெரிவித்தார்.
webdunia photo
FILE
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் 1,200க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் இதுவரை சபாக்களில் மட்டுமே பாடிவந்த கர்நாடக இசை கலைஞர்கள் அங்கிருந்து வெளியே வந்து சாதாரண மக்களுக்கு மத்தியில் பாடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பெரிய உணவு திருவிழா நடைபெறும். இதில், 15 நட்சத்திர ஓட்டல் உணவகங்கள் கலந்து கொள்கின்றன. நட்சத்திர ஓட்டல்களில் 400 ரூபாய்க்கு விற்கப்படும் உணவு இங்கு 70 ரூபாய்க்கு கிடைக்கும். இங்கு கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களும் விற்பனை செய்யப்படும் என்றார் கனிமொழி.
நாட்டுப்புற கலைகளான பறையாட்டம், பாவை கூத்து, தெருக்கூத்து, சிலம்பாட்டம், வழுக்கு மரம், மல்யுத்தம் போன்றவையும் நடைபெறும் என்று தெரிவித்த கனிமொழி, இந்த ஆண்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கோவ ையிலும் ' சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்றும் இந்தாண்டு கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் கவிதை போட்டி களில் தமிழகம் முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளல ாம் என்றும் கனிமொழி கூறினார ்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் 'சென்னை சங்கமம்' தொடக்க விழ ாவை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார் என்று தெரிவித்த கனிமொழி, இதன் நிறைவு விழா ஜனவரி 16ஆம் தேதி சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைப ெறும் என்றார்.