Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நடமாடும் மருத்துவ குழு வாகன‌ம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (16:35 IST)
மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான அனைத்து சாதனங்களும் பொருத்தப்பட்டு, மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய 100 நடமாடும் மருத்துவ‌க் குழு‌ வாகனங்களை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.

TN.Gov.TNG
2006 - 2007 ஆம் ஆண்டில் 146 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, மக்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன.

இரண்டாம் கட்டமாக, தற்போது மேலும் 100 ஊராட்சி ஒன்றியங்களில் 6 கோடி ரூபாய் செலவில் 100 ஆம்புலன்ஸ் வாகனங்களில் அடிப்படை மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான அனைத்து சாதனங்களும் பொருத்தப்பட்டு, மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய 100 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு ம‌ற்று‌ம் குடும்ப நலத்துறை சார்பில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக 2 கோடியே 4 லட்சத்து 55 ஆயிரத்து 775 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் கருணாநிதியிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments