Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரும‌ங்கல‌ம் : தி.மு.க. வேட்பாளர் மனுதாக்கல்

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (15:01 IST)
திரும‌ங்கல‌ம் தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் லதா அ‌தியமா‌ன், ச.ம.க. வே‌ட்பாள‌ர் இரா.பத்மநாபன் ஆ‌கியோ‌ர் இ‌ன்று வே‌ட்புமனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர்.

உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் முன்னிலையில் லதா அ‌தியமா‌ன் தனது மனுவை உத‌வி தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி சேதுராம‌னிட‌ம் கொடு‌த்தா‌‌ர்.

மு‌ன்னதாக வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்வத‌ற்காக திருமங்கலம் சந்தைப்பேட்டையில் இருந்து திறந்த வாகன‌த்‌தி‌ல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, வேட்பாளர் லதா அதியமான், அமைச்சர் பொன்முடி உ‌ள்பட க‌ட்‌சி‌யி‌ன் மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் ஊர்வலமாக வந்தனர். அவர்களை தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அழைத்து வந்தனர்.

இதேபோ‌ல், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் இரா.பத்மநாபன் கட்சியினருடன் சென்று மனுத் தாக்கல் செய்தார். இன்று மனுத்தாக்கல் செய்ய கடைசி நா‌ள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை (டிச.23) நட‌க்‌கிறது. வேட்பு மனுக்களை ‌வில‌க்‌கி‌க் கொள்ள 25ஆ‌ம் தே‌தி கடை‌சி நாளாகு‌ம். 26ஆ‌ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments