Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயந்‌திர‌ம் தயா‌ரி‌ப்பு : அமெ‌ரி‌க்க ‌நிறுவன‌‌த்துட‌ன் த‌மிழக அரசு பு‌ரி‌ந்து‌ண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (14:07 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த கேடர்பில்லர் நிறுவனம் த‌மிழக‌த்த‌ி‌ல் 800 கோடி ரூப ா‌ய் முதலீட்டில் க‌ட்டுமான‌ம், சுர‌ங்க‌த் தொ‌ழி‌ல்களு‌க்கு இய‌ந்‌திர‌ங்களை தயா‌ரி‌ப்பத‌ற்கான விரிவாக்கத ் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணா‌நி‌த ி முன்னிலையில் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌‌தி‌ல் இ‌ன்று நடைபெற்றத ு.

அமெரிக்காவைச் சேர்ந்த கேடர்பில்லர் நிறுவனம் கட்டுமானம ், சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஒரு மிகப் பெரிய நிறுவனமாகும். இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவ ா‌ய ்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்தியாவில், பெருமளவில் முதலீடுகள் ச ெ‌ய ்துள்ள கேடர்பில்லர் நிறுவனத்தின் கட்டுமான இயந்திரங்கள், டீசல் மின்உற்பத்தி இயந்திரங்கள ், இஞ்சின் தயாரிப்புப் பிரிவுகள் தமிழகத்தில் திருவள்ளூரிலும், ஓசூரிலும் ஏற்கனவே அமைந்துள்ளன. அவற்றுள் 2 ஆயிரத்து 400 பேர் நேரடியாகவும், 7 ஆயிரத்து 500 பேர் மறைமுகமாகவும் வேலைவ ா‌ய ்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிறுவனம் தற்போது 800 கோடி ரூப ா‌ய் முதலீட்டில் கட்டுமானம ், சுரங்கத் தொழில்களுக்குப் பயன்படும் கனரகப் பொறியியல் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கான விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்திட முடிவு ச ெ‌ய்த ுள்ளது. அதன்படி, திருவள்ளூர ், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்குவதுடன், சென்னைக ்கு அருகில் மற்றுமொரு புதிய இடத்திலும் ஒரு தொழில் பிரிவைத் தொடங்கிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏறத்தாழ 600 பேருக்கு நேரடி வேல ைவா‌‌ய்‌ப ்பும், 1,900 பேருக்கு மறைமுக வேலைவ ா‌ய ்ப்பும் வழங்கக் கூடிய இப்புதிய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, கேடர்பில்லர் இந்தியா நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஆர்.தீனமேன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments