'' திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.இ.அ. த ி. ம ு. க போட்டியிட வேண்டும் என்பது ம. த ி. ம ு. க நிர்வாகிகளால் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவ ே'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார ்.
webdunia photo
FILE
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாராளுமன்ற தேர்தல் 4 மாதத்தில் நடக்க இருக்கிறது. அதனால், திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.இ.அ. த ி. ம ு.க. வை போட்டியிட செய்யலாம் என்று கூட்டணி கட்சியான ம. த ி. ம ு. க, ஆலோசித்து முடிவு செய்தது. அதை விமர்சனம் செய்வது கேலிக்குரியது என்றார்.
'' மானம், மரியாதையை இழக்க முடியாது என்ற காரணத்தால் ப ா.ம.க. வை வெளியேற்றினோம ்'' என்று செய்தியாளர்களிடம் தமிழக முத லமைச்சர் கருணாநிதி கூறினார் என்று தெரிவித்த வைகோ, ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நாங்கள் எப்போது ப ா.ம.க. வை வெளியேற்றினோம ்?'' என்று கேட்கிறார ்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியது. ஆனால், போர் நிறுத்தத்துக்காக இலங்கை அரசை இந்திய அரசு இதுவரை வலியுறுத்தவில்லை என்று வைகோ கூறினார்.