Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர் தற்கொலை ப‌ற்‌றி நீதி விசாரணை: சரத்குமார் கோ‌ரி‌க்கை

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (10:24 IST)
'' எம ்.ஆ. ர்எப் தொழிற்சாலையில், ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவ‌ர் தற்கொலை செய்துள் ளது குறித்து த‌மிழக அரசு நீதி விசாரணை நடத்தவேண்டும ்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அரக்கோணம் எம ். ஆர ். எப் தொழிற்சாலையில், நிரந்தர தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2,500க்கு மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், 6 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் தொழிற்சாலையில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், சம்பவம் நடப்பதற்கு முன்பாக முதல் ஷிப்டில் வேலை செய்த சுரேஷ்குமாரை 2வது ஷிப்டிலும் வேலை செய்ய வேண்டும் என சூப்ரவைசர்கள் வற்புறுத்தி உள்ளதாக தெரிகிறது. அவரை அவர்கள் அடித்ததாகவும், அதனால் அவர் கழிவறையில் பிணமாக தொங்கினார் என்றும் தொழிலாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

எனவே, பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். தொழிலாளர்களுடன் பேசி அவர்களின் குறைகளை களைவது அரசு கடமை எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments