Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவ‌ரி 1ஆ‌ம் தே‌தி முத‌ல் முடிதிருத்த‌ம் க‌ட்டண‌ம் உய‌ர்வு

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (10:10 IST)
த‌மிழக‌ம் முழுவது‌ம் ஜனவரி 1 ஆ‌ம் தேதி முதல் முடிதிருத்தும் கட்டணம் 50 ரூபாயாக உயர்கிறது எ‌ன்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங் க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக ச‌ங்க‌த் தலைவர் எம்.நடேசன், மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ஜி.பாக்கியநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில ், பொருட்களின் விலைவாசி உயர்வை முன்னிட்டு ஜனவரி 1 ஆ‌ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து முடிதிருத்தும் நிலையங்களிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் இந்த கட்டண உயர்வுக்கு ஆதரவு தந்து முடிதிருத்தும் தொழிலாளிகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டுகிறோம்.

உயர்த்தப்பட்ட கட்டண விவரம் : உயர்த்தப்பட்ட கட்டணம் ரூபாயில் - சாதாரண சலூன் - ஏ.சி. சலூன்

முடிதிருத்துதல் மட்டும் 50ரூபாய்-60 ரூபாய ், முகமழித்தல் மட்டும் 25-30, ஸ்பெஷல் முகமழித்தல் 30-35, சிறுவர் முடிதிருத்துதல்40-50, சிறுமி முடிதிருத்துதல் 50, 55, தாடி ஒதுக்குதல் 30-40, தலை கழுவுதல் (ஷாம்புடன்) 30-35, முடி உலர்த்துதல் 30-35, தலை ஆயில் மஜாஜ் 100-120, வெள்ளை முடியை கறுப்பாக்குதல் 150-175, பேஸ் பிளீச்சிங் 250-300, பேஷியல் 300-400, ஹேர் கலரிங் 350-400, ஹேர் ஸ்ரெட்டனிங் 800-1,000 மேற்கண்டவாறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments