மங்களூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஏன்? என்பதற்கு முதலமைச்சர ் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்க ை:
மங்களூர் தொகுதியில் இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்காததற்கு கருணாநிதி அரசின் சூழ்ச்சிதான் காரணம் என்று இரண்டொரு அரசியல் மேதைகள் பேசியுள்ளார்களே?
1983 ஆம் ஆண்டு, இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நானும், பேராசிரியரும், அன்றைய பேரவைத் தலைவர் ராஜாராமுக்கு 10.8.1983 அன்று விலகல் கடிதம் அனுப்பினோம். ஆனால், பேரவைத் தலைவர் அந்த கடிதங்கள் முறைப்படியான படிவத்திலே எழுதப்படவில்லை என்றும், காரணம் கூறி பதவி விலகினால் அது செல்லாது என்றும் தெரிவித்துவிட்டார்.
எனினும் அப்போது நாங்கள் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளாமல் பேரவைத் தலைவர் கூறியவண்ணம் சட்டப்பேரவை விதிகளின்படி ராஜினாமா பதவி விலகல் கடிதங்களை கொடுத்தோம். அதன் பிறகே சட்டப்பேரவை தலைவரால் எங்கள் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், இப்போது மங்களூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வம் அனுப்பியிருந்த ராஜினாமா கடிதம் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டதாக அமையவில்லை.
விதி 21 (1)-ன் படி ''பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக விரும்பும் ஓர் உறுப்பினர், இதற்காக இணைப்பு `ஊ'வில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் பேரவைத் தலைவருக்கு தம்முடைய எண்ணத்தை தம் கைப்பட எழுதி கையொப்பமிட்டுத் தெரிவிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கு.செல்வம் அனுப்பியிருந்த ராஜினாமா கடிதம் உரிய படிவத்தில் அளிக்கப்படாததாலும், பேரவை உறுப்பினர் பதவி விலகல் எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என்று குறிப்பிடப்படாததாலும், பேரவை உறுப்பினர் பதவி விலகும் கடிதத்தில் வேறு எந்தப் பொருளும் புகுத்தப்படக்கூடாது என்பதாலும், பேரவை விதி 21 (1)-க்கு ஒவ்வாத வகையில் அளிக்கப்பட்ட அவரது பதவி விலகல் கடிதம் பேரவை தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எனவே, மங்களூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. தொகுதி காலியாக உள்ளது என்று முறைப்படி அறிவிக்கப்பட்டதற்கு பிறகுதானே இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய முடியும்!
மனிதனுக்க ு பதில ் இயந்திரம ்
சாக்கடைக்குள் மனிதர்களே இறங்கி, அவற்றை தூய்மைப்படுத்தும் வேலையிலும், சாக்கடைகளின் அடைப்புகளை நீக்கும் வேலையிலும் ஈடுபடும் கொடுமையான நிலைமையை நீக்க தமிழக அரசு எந்த விதமான மாற்று ஏற்பாடுகளை செய்ய எண்ணியிருக்கிறது?
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிச் சுமக்கும் இழிநிலையைச் சட்டப்பூர்வமாக நீக்கியது கழக அரசுதான். அதன் தொடர்ச்சியாக, சாக்கடைகளைத் தூய்மைப்படுத்தவும், அவற்றில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கவும் மனிதர்களே சாக்கடைகளுக்குள் இறங்கி வேலை செய்யும் நிலை இதுவரை இருந்து வந்த கொடுமையை மாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான்;
சென்னை மாநகராட்சியில் சாக்கடைகளுக்குள் அடைப்புகளை நீக்குவது போன்ற வேலைகளை செய்ய பரீட்சார்த்தமாக, 3 இயந்திரங்கள் வாங்கிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை நல்ல பலன் அளித்திருப்பதால், மேலும் 10 இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் சாக்கடைகளை தூய்மைப்படுத்தவும், அடைப்புகளை நீக்கவும்; சென்னை மாநகராட்சியில் நடைபெறுவதைப் போலவே, இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக; அரசு வழங்கிவரும் சலுகைகளை இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பாராட்டியுள்ளாரே?.
ஆம ், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜி.என்.ரேயின் பாராட்டுரையின் சில பகுதிகள்; நன்றியுணர்வும ், பண்பாடும் மிக்கதாக இருந்தத ு. அது வருமாறு:
'' தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நலனுக்காகவும், அவர்களுடைய மேம்பாட்டுக்காகவும் அரசு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கைகள், வழங்கிவரும் சலுகைகள், வசதிகள் ஆகியவற்றை அறிந்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் இந்த உதாரணத்தை பின்பற்றும் என்று நம்புகிறோம்.
இந்தியாவின் மகுடம் போன்ற இந்த மாநிலத்தில் எங்களுடைய கூட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாடு மிக நீண்ட பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் கொண்டதாகும்.
முதலமைச்சர் கருணாநிதி விளக்கிய செய்திகள் அனைத்தையும் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் சென்று, அங்கே பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று உறுதி கூறுகிறோம். மக்களுக்கு உண்மையான செய்திகளைக் கொண்டு செல்வதில் பத்திரிகைகளுக்கு என்று பிரத்யேகமான உரிமை ஒன்று உள்ளது. அந்த உரிமையை ஒட்டியே அவர்களுக்கு என்று ஒரு பொறுப்புணர்வும் இருக்கின்றது. அந்த பொறுப்புணர்ச்சியை பத்திரிகைகள் முறையாகக் கடைபிடிக்கவில்லை என்றால் கருத்து சுதந்திரத்தை பற்றிய மக்களுடைய எண்ணம் மாறிவிடும்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதமொன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றிச் செய்ய வேண்டும். பத்திரிகைகள் ஜனநாயகத்தின் 4-வது அங்கமாக விளங்குகிறது; மற்ற 3 அங்கங்களோடும் பத்திரிகைகள் ஒருங்கிணைந்து, ஒத்துழைத்துப் பணியாற்றினால்தான் நமது நாடு வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற முடியும்.
தமிழகத்தை போல மற்ற மாநிலங்களும் கருத்துச் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்குமானால், நமது நாட்டில் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமான வளர்ச்சியை நிச்சயமாக பெற முடியும். நாங்கள் தமிழ்நாட்டின் மணத்தையும ், கருத்துச் சுதந்திரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் நல்ல முறையில் பாதுகாத்திடும் அறிவார்ந்த முதலமைச்சரை பற்றிய நினைவையும் எங்களுடன் எடுத்துச் செல்கின்றோம்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரி மாநிலமாக விளங்கிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு'' இவ்வாறு 'ரே' பேசினார் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.