Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 21 பே‌ர் மு‌ன் ‌பிணை கே‌ட்டு மனு

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (17:58 IST)
கடந ்த ாண்டு செ‌ன்னை சட்டக்கல்லூரி விடுதியில் மாண‌வ‌ர்களு‌‌க்கு இடையே நடந்த மோத‌லி‌ன்போது கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட மாணவ‌ர்களை ‌விடு‌வி‌‌க்க‌க் கோ‌ரி காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை தா‌க்‌கிய வழ‌க்‌கி‌‌ல் 21 மாணவ‌ர்க‌ள் மு‌ன் ‌பிணை கே‌ட்டு செ‌ன்னை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

2007 ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 10ஆ‌ம் தே‌தி அன்று சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு மாணவ‌ர்களு‌க்கு இடையே நட‌ந்த மோத‌லி‌ன் போது காவ‌ல்துறை உத‌வி ஆணைய‌ர் ராஜாமணி தாக்கப்பட்டார். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ‌ மு‌ன்‌பிணை வழங்கப்பட்டுள்ளது.

இத‌‌னிடையே இந்த வழக்கில் தொட‌ர்புடையதாக கூற‌ப்படு‌ம் வழ‌க்க‌றிஞ‌ர் மாரிதாஸ் உள்பட 21 மாணவர்கள் மு‌ன் ‌பிணை கேட்டு செ‌ன்னை அம‌ர்வு நீதிமன்றத்தில் இ‌ன்று மனு தாக்கல் செய்துள்ளனர ்.

அ‌ந்த மனுவில ், ''காவ‌ல்துறை‌யினரை தா‌க்‌கியதாக கூற‌ப்ப‌டு‌ம் ‌ச‌ம்பவ‌ம் நட‌ந்து ஓராண்டு ஆகிவிட்டது. இந ் தநிலையில் காவ‌‌ல்துறை‌யின‌ர் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சட்டக்கல்லூரியில் நடந்த ‌ நிக‌‌ழ்வு‌க்கு‌ம ், மாணவர் விடுதியில் நடந்த ‌ நிக‌ழ்வு‌க்கு‌ம் எ‌ங்களு‌க்கு தொடர்பில்லை.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன ்‌பிணை பெற்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் எங்களுடைய பெயர்கள் இல்லை. ஆனாலும் பழிவாங்கும் நடவடிக்கையாக காவ‌‌ல்துறை‌யின‌ர் எங்களை கைது செய்யக் கூடும் என கருதுவதால் முன ்‌பிணை வழங்க கோருகிறோம ்'' எ‌ன்று மனுவில் கூ‌றியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த மனு ‌விரை‌வி‌ல் ‌விசாரணை‌க்கு வரு‌ம் எ‌ன தெ‌ரி‌‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments