இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், தமி ழகத்தில் குறு, சிற ு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், தொழில் பிரிவுகளில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ள நவீன தொழில் நுட்பத்தை புகுத்தி வேலைவாய்ப்பை பெருக்கிடவும், சுய தொழில் செய்வதை ஊக்குவிக்கவும் தமிழகத்திலேயே முதன் முறையாக புதிய சிறுதொழில் கொள்கை உருவாக்கப்பட்டு 22.2.2008 அன்று முதலமைச்சர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தகுத ிய ுடைய தொழில் முனைவோர்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பம் செய்து மானியத்தொகை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மானியம் கோரி பெறப்பட்ட 244 மனுக்களில் 119 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 79 மனுக்களுக்கு மொத்தம் ரூ.3.7 கோடி மானியமாக வழங்கப்பட்டு விட்டன. ரூ.34 லட்சம் மானியத்தொகை வழங்க தயார் நிலையில் உள்ளது. இதர மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.