Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌யி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌ம்: ஜெய‌ல‌லிதா

Webdunia
புது‌ச்சே‌ரி‌யி‌ல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வ‌லியுறு‌த்‌தி அ.இ.அ. த ி. ம ு. க சார்பில் நாளை ச‌ட்ட‌ப்பேரவை அரு‌கி‌ல் க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்க ை‌யி‌ல், அண்மையில் பெய்த தொடர்மழ ை, புயலின் காரணமாக புதுச்சேர ி, காரைக்கால் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. நகர கட்டமைப்பு வசதிகள் சரி செய்யப்படாததன் காரணமாக கழிவுநீர் வாய்க்கால் மூலம் கடலில் கலக்க வேண்டிய மழை நீர், நக ர, கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும்,ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமடைந்து உள்ளதாகவும், உயிரிழப்பு, வேலை இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி மாநில மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தை புயல் பாதித்த மாநிலமாக அறிவித்த அரச ு, நிவாரண உதவியாக முற்றிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், பாதியளவு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் அரசின் இது போன்ற செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், பெருமழ ை, புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிசை வீடுகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாயும், தண்ணீரால் சூழப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயக் கடன ், நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அ.இ.அ. த ி. ம ு. க சார்பில் நாளை (14ஆ‌ம் தேத ி) காலை 10 மண ி‌க்கு புதுச்சேரி சட் ட‌ப்பேரவை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments