Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கை பாதுகா‌‌க்கு‌ம் பொறு‌ப்பு அரசு‌க்கு உ‌ள்ளது: கருணா‌நி‌தி எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (14:55 IST)
சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்ட ு, நிவாரணப் பணிகளிலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்ப ி, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடச் ச ெ‌ ய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் தடுத்தி நிறுத்தி; மாநிலத்தில் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு உ‌ள்ளது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், அண்மையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெருமழ ை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, உடைமை இழப்பு போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் அளித்து; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை போர்க்கால அடிப்படையில் ச ெ‌ ய்து; இந்த மாதிரியான பேரழிவை தடுப்பதற்கு எதிர்காலத்திற்கும் தேவையான நிலையான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதோடு; அதற்கு
தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து முதல்கட்டமாக 600 கோடி ர ூ‌ பா‌ய ் ஒதுக்கீடு ச ெ‌ ய்துள்ளது.

முதல்கட்டமாக ஒதுக்கீடு ச ெ‌ ய்யப்பட்டுள்ள இந்த நிதியைக் கொண்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூப ா‌ ய்; பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூப ா‌ ய ், 10 கிலோ அரிசி; சென்னை மாநகரத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் மழைவெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூப ா‌ ய்; மாவட்டங்களில் மழ ை, வெள்ளம் ச ூ‌ ழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், மழ ை, வெள்ளம் புகுந்த வீடுகளுக்கும் தலா ஆயிரம் ரூப ா‌ ய்; முகாம்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வேட்டிகள், சேலைகள்; பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள் என்று இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 175 கோடி ரூப ா‌ ய ் அளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

உடனடி சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயிர்ச் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் ச ெ‌ ய்துள்ள நெறிமுறைகளின்படி எக்டேர் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூப ா‌ ய ் நிவாரண உதவி என்பதற்கு மாறாக, அதனை உயர்த்தி எக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூப ா‌ ய ் என்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் ச ெ‌ ய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து அரசின் சார்பில் ஏற்கனவே 2006-2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்துவரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி ( crop insurance schem e) பதிவு ச ெ‌ ய்து கொண்ட விவசாயிகளுக்கு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு எக்டேருக்கும் 10 ஆயிரம் ரூப ா‌ ய ் வரையில் நிதிஉதவி கிடைக்க இருக்கிறது.

இவை அனைத்தையும் விளக்கி அரசின் சார்பிலேயே அறிவிப்புகள் வெளியிட்டிருந்தும்கூட; சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்ட ு, அனைவரும் பாராட்டும் அளவிற்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளிலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்ப ி, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடச் ச ெ‌ ய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் தடுத்தி நிறுத்தி; மாநிலத்தில் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு இருப்பதைக் கருத்தில்கொண்டு; மக்கள் பிரச்சினையில் உண்மையிலேயே கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை வேண்டுவதுடன், அரசின் கடமையை தொடர்ந்து ச ெ‌ ய்திட உறுதி எடுத்துக் கொள்கிறோம் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments