Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (10:58 IST)
மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் பல‌த்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோயிலும் அண்ணாமலையார் மலையும் கமாண்ட ோ, அதிரடிப்படையினரால் கண்காணிக்கப்படுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. அண்ணாமலையாருக்கு வைர கீரிடமும், தங்க கவசமும் சாத்தப்பட்டது.

பிரதோஷ நந்தி சிலை அருகே பஞ்ச தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இறைவன் ஒருவனே என்பதை குறிக்கும் வகையில் பஞ்ச தீபங்களையும் ஒரே தீபமாக (பரணி தீபம்) ஏற்றினர்.

மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை காண்பதற்காக லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால் திருவண்ணாமலை, பக்தர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

மும்பையில் பய‌ங்கரவா‌திக‌ள ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் அண்டை மாவட்டங்களான வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மண்டல காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் (ஐ.ஜி.) ரமேஷ்குடாவ்லா தலைமையில் வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ர் (டி.ஐ.ஜிக்கள ்), மாவ‌ட்ட துணை க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர்க‌‌ள ் 7 பே‌ர ் ( எஸ்.பி.க்கள ்) உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல‌‌ர்க‌ள ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிறப்புப்படை, ஆயுதப்படை, அதிரடிப்பட ை‌ யின‌ர ் 2,000 பேருடன், 200 கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகமும், மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியும் கமாண்டோ வீரர்கள ், அதிரடிப்படையினரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல்முறையாக கோயில் பகுதி முழுவதையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள ், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர். கோயிலில் 6 இடங்களில் சுழல் க ே‌ மிராக்களும் அதன் சுற்றுப்புறங்களில் 40 ரகசிய க ே‌ மிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக டவுன் காவ‌ல்நிலையத்தில் புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments