Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சியில் 11ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (17:09 IST)
‌ மி‌ன்வெ‌ட்ட ு, ச‌ர்‌க்கர ை ஆல ை ‌ விவகார‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைகள ை வ‌லி‌‌யுறு‌த்‌த ி க‌ள்ள‌க்கு‌றி‌ச்‌சி‌யி‌ல ் 11 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத ு:

தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான மின்வெட்டு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி தொடங்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதே சமயத்தில் மின் உற்பத்தி துவங்குவதற்காக ஒவ்வொரு உறுப்பினரிடமும் கரும்பு டன் ஒன்றிற்கு 50 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு விட்டதாகவும் கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இதுவரையில் எந் த‌ விதமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில், 11ஆ‌ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments