Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.ஐ. முத்திரை மோசடி: சிமெண்ட் நிறுவனத்திற்கு ரூ.40,000 அபராதம்

Webdunia
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (13:02 IST)
ஐ. எஸ ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்தி சிமெண்ட் தயாரித்த நிறுவனத்திற்கு நாமக்கல் நீதிமன்றம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

நாம‌க்க‌ல ் மாவ‌ட்ட‌ம ், பரம‌த்‌த ி வேலூ‌‌‌ர ், தேவனா‌ம்பாளைய‌த்‌தி‌ல ் நியூ சென்னை சிமெண்ட் பி லிட், என்ற சிமெண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தரமற்ற சிமெண ்‌ ட்டை உற்பத்தி செய்து அதற்கு ஐ. எஸ ்.ஐ. முத்திரையை‌த் தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது 43 கிரேடு ஓபிசி சிமெண்ட் ஐஎஸ்ஐ முத்திரையுடன் தயாரித்து அது ஐஎஸ் 1089 (பிடி 1)-க்கு இணையாக இருப்பதாக விற்பனை செய்து வந்தது. இதன் மூலம் இந்திய தரநிர்ணய சட்டம் 1986- ஐ ‌ மீ‌றி‌யிரு‌ப்பத ு தெரியவந்தது.

இதையடுத்து இந்நிறுவனத்தில் 2006 நவம்பர் 22 அன்று அதிரடி ஆய்வு நடத்தி ய தர‌நி‌ர்ண ய அ‌திகா‌ரிக‌ள ், 2007 ஏப்ரல் 19 அன்று நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொட ு‌ த்தன‌ர ்.

வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி, ஐ. எஸ ்.ஐ. முத்திரையை‌த் தவறாக பயன்படுத்திய இந்நிறுவனத்திற்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments