பக்ரீத் நன்னாளில், பகிர்ந்தளித்து மகிழ்ச்சியடையும் சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வளர்த்திட நாம் உறுதிபூணுவோம ் என்று பக்ரீத் வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், கடமை உணர்வுடன் இறைநெறியைக் கடைபிடிக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழும் புனித பக்ரீத் திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஹஜ் என்னும் புனிதப்பயணம், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது. நபிகளின் தந்தை என அழைக்கப்படும் ஹஜ் ரத் இப்ராஹிம் அவர்களின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் மார்க்கச் செயல்களாக விதிக்கப்பட்டு நினைவூட்டப்படும் திருநாளே பக்ரீத் எனும் தியாகத் திருநாள் ஆகும்.
உற்றார், உறவினர், ஏழைகள் என அனைவரும் இணையும் புனிதமான தியாகத் திருவிழாவாம் இந்த பக்ரீத் நன்னாளில், பகிர்ந்தளித்து மகிழ்ச்சியடையும் சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வளர்த்திட நாம் உறுதிபூணுவோம்.
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என்று என்னுடைய அவாவினைத் தெரிவித்து மீண்டும் எனது இனிய பக்ரீத் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.