மக்களவை த ேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, தமிழக பா.ஜ. உயர்மட்ட குழு நாளை சென்னையில் கூடி முடிவு செய்யும் என்று தெரிவித்த மாநில தலைவர் இல.கணேசன ், பா.ஜ.வுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுக்க ஆண்டவன் அவருக்கு கட்டளையிட வேண்டும் என்றார்.
webdunia photo
FILE
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி முடிவாகி விட்டது என்ற வெற்றிக்களிப்பில் பாரதிய ஜனதாவுக்கு இனி ராமனும், அனுமனும் தான் கூட்டணி என்று கூறுகிறார். ராமரும், அனுமனும் எங்களோடு துணை இருந்தால்போதும், தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார்.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அ.இ.அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ள நிலையில், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை வரும் 9ஆம் தேதி (நாளை) சென்னையில் பா.ஜ. உயர்நிலை குழு கூடி முடிவு செய்யும் என்று கூறிய இல.கணேசன், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஓட்டுக்களையும், தேர்தலையும் மட்டுமே மனதில் வைத்து நடந்துள்ளது என்றார்.
அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர இனி வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த இல.கணேசன், தி.மு.க கூட்டணி பலவீனப்பட்டு கொண்டு இருக்கிறது. அதனால்தான் உயர்நிலைக்குழுவை கூட்டி வெளியேற்றிய பா.ம.கவை அவர்கள் வரவேற்கின்றனர் என்று தெரிவித்தார்.
பா.ஜ.வுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்த இல.கணேசன், அதற்கு ஆண்டவன் அவருக்கு கட்டளையிட வேண்டும் என்றார்.