ஏழ ை விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்க ு நிலங்களை வாங்கி பெரிய நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசை கண்டித்து அ.இ. அ.தி.மு.க. சார்பில் வரும் 8ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால்கூட்டு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்ற பெயரில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வெம்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்புலிமேடு, செல்ல பெரும்புலிமேடு, மாங்கால், மாத்தூர், உக்கம் பெரும்பாக்கம், சோழவரம், அழிஞல்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களையும், அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணை, குண்ணவாக்கம ், மகாஜனம்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள விளை நிலங்களையும், அங்குள்ள ஏழை, எளிய விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி பெரிய நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பயிர்த் தொழிலையே நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என்றும், குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 8ஆம் தேதி காலை 10 மணி அளவில், வெம்பாக்கம் ஒன்றியம், மாங்கால் கூட ்டு சாலையில் அமைந்துள்ள சிப்காட் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.