Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடுவெட்டி குரு ‌பிணை‌ய விடுதலையானா‌ர்

Webdunia
ஞாயிறு, 30 நவம்பர் 2008 (15:00 IST)
‌ காடுவெ‌ட்டி குரு திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் இரு‌ந்து இ‌ன்று காலை ‌பிணைய ‌விடுதலையானா‌ர்.

அரியலூரில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் மத்திய அமை‌ச்ச‌ர் ஆ.ர ாஜ ா, ஆண்டி மடம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர ் சிவசங்கர், பெரம்பலூர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டிகுரு மீது வழக்கு தொடரப்பட்டது.

கட‌‌ந்த ஜூலை மாத‌ம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குரு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சுமா‌ர் ஐ‌ந்து மாத‌ங்களாக ‌சிறை‌யி‌ல் இ‌ரு‌ந்த காடுவெ‌ட்டி‌ குரு இ‌ன்று ‌விடுதலையானா‌ர்.

க டந்த சில தினங்களுக்கு முன்பு குரு மீதான வழக்கை ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து குணசேகரன் என்பவரை மிரட்டிய வழக்கில் குருவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌பிணைய ‌விடுதலை அ‌ளி‌த்தது.

மத்திய அமை‌ச்ச‌ரை ‌மிர‌ட்டிய வழ‌க்‌கி‌ல் ‌பிணைய ‌விடுதலை‌க் கே‌ட்டு அ‌ரியலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் குரு ‌மனு தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர். மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ‌வ ிஜயராண ி, ரூ.10 ஆயிரத்துக்கு இருநபர் ‌ பிணையமு‌ம், தேவையான போது அரியலூர் காவ‌ல்‌ நிலையத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்ற நிபந்தன ையுடனு‌ம் ‌பிணைய ‌விடுதலை வழங்கி உத்தரவிட்டார்.

‌ நீ‌திம‌ன்ற உத்த ர‌வினை‌த் தொட‌ர்‌ந்து இன்று காலையில் சிறையில் இருந்து குரு விடுதலை செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments