Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு‌ப்படை- டி.ஜி.பி. ஜெயின்

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (15:44 IST)
தமிழகத்தை பொருத்தவரை ஏற்கனவே தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்ப ு‌ப ்படைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எ‌ன்று‌ம் மேலு‌ம் தனிப்படை அமைக்க ஆவன‌ம் செய்யப்படும் எ‌ன்று‌ம் த‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌‌ம் பே‌சிய அவ‌ர், நீலகிரி அகதிகள் முகாமில் தங்கியிருந்த வசந்தன் என்பவர் ஒரு சில அமைப்புகளுடன் சேர்ந்து உள்நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், தனிமுகாமில் அவர் வைக்கப்பட்டுள்ளார். வேறுயாரும் அவ்வாறு வைக்கப்படவில்லை எ‌ன்றா‌ர்.

அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ஜெ‌யி‌ன், அகதிகளாக 73 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இவர்களில் 23 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். மற்றவர்கள் வெளியிடங்களில் தங்கியிருக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் தங்களுக்குரிய அனுமதியை புதுப்பித்து கொள்கிறார்கள் எ‌ன்று கூ‌றினா‌ர்.

தமிழகத்தை பொருத்த வரை ஏற்கனவே தீவிரவாதிகளை ஒடுக்க 2 சிறப்பு‌ப்படைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எ‌ன ்று‌ம் மேலு‌ம் தனிப்படை அமைக்க ஆவன‌ம் செய்யப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சிறப்பு அதிரட ி‌ப ்படை, நக்சல் ஒழிப்பு படை இவற்றின் மூலம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடித்து வருகிறோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த காவ‌ல்துறை தலைமை இய‌க்கு‌ன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன், இதில் கூடுதல் காவ‌ல‌ர்க‌ள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு இன்னும் தீவிரப்படுத்தபடும் எ‌ன்று‌ம் தேன ி, திண்டுக்கல், தருமபுரி மாவட்டத்தில் உள்ள மல ை‌ப ்பகுதிகளில் கூடுதல் காவ‌ல‌ர்க‌ள் நியமித்து நக்சல்கள் தேடுதல் வேட்டையை தீவிர‌ப்படுத்தியுள்ளோம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சென்னை அசோக் நகரில் ஓய்வு பெற்ற அதிகாரி சரவணன் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன எ‌ன்று‌ம் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தமிழ்நாட்டில் கள்ளநோட்டை புழக்கத்தில் விடுபவர்களுக்கு கேரளா, நேபாளம், பாகிஸ்தான், வ‌ங்கதேச‌ம் ஆகிய இடங்களிலிருந்து கள்ள நோட்டுகள் வருவது தெரியவந்துள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.பி.ஜெயின் கூ‌றினா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments