Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : ல‌‌ண்ட‌ன் செ‌ன்றா‌ர் வைகோ!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (23:30 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்காக இ‌ங்‌கிலா‌ந்து நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ள கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ இ‌ன்று ல‌ண்ட‌ன் புற‌ப்ப‌ட்டு‌‌ச் செ‌ன்றா‌ர்.

லண்டனில் நடைபெறு‌ம் இ‌ந்த கூட்டத ்தை ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ள இங்கிலாந்து நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌சில‌ர், கூட்டத்தில் பங்கேற்று பேச வைகோவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌ர், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நார்வே நாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கூட்டத்தில் பங்கேற்க நான் திட்டமிட்டு இருந்தபோது, இங்குள்ள சிலர் எனக்கு விசா கிடைக்கவிடாமல் செய்தனர் ஆனால் நார்வே தூதரக அதிகாரிகள் முயற்சி செ‌ய்து எனக்கு விசா கிடைக்கச் செ‌ய்தன‌ர்" எ‌ன்றா‌ர்.

அதுபோல், இப்போது தா‌ன் லண்டன் செல்வதை விரும்பாத சிலருடன் இலங்கை தூதரக அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு தனக்கு விசா கிடைக்கவிடாமல் தடுக்க முயன்றனர் எ‌ன்று‌ கு‌ற்ற‌ம் சா‌ற்‌றிய வைகோ, ஆனால் தனது நலம் விரும்பிகள் சிலரது முயற்சியால் தன‌க்கு விசா கிடைத்து‌ள்ளதாகவு‌ம் கூ‌றினா‌‌ர்.

மும்பை செ‌ன்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் லண்டன் செல்வதாக கூ‌றிய வைகோ, கடைசி நேரத்தில் கூட விசாவை ரத்து செய்ய சிலர் முயற்சி செய்யக்கூடும் என்பதால்தான் இதுபற்றி யாரிடமும் தகவல் சொல்லாமல் இருந்ததாகவு‌‌ம், லண்டன் கூட்டத்தில் பேசி விட்டு 30ஆ‌ம் தேதி சென்னை திரும்புவதாகவு‌ம் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments