Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருந்ததியர் சமுதாயத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு: முதல்வர்!

Webdunia
தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மனித மலத்தைக் கைகளால் அள்ளி, தலையால் சுமந்தும், கழிவுநீருக்குள் மூச்சடக்கி மூழ்கியும், குப்பை கூளங்களை அகற்றி சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தியும், தாழ்த்தப்பட்டோருள் மிகவும் தாழ்த்தப்பட்டோராய்- கடைசிப் பிரிவினருள் கடைக்கோடி பிரிவினராய் வாழ்ந்து வரும் அருந்ததியர் வகுப்பினரின், முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக்கருதி, தற்போது ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் இவர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளத ு என்று 23/01/2008 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியா க, 12 /03/2008 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சி களின் கூட்டத்தில், சமூக, கல்வி, பொருளாதார நிலை களில் அடித்தளத்திலே உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு உள்ளேயே அருந்ததியர் எனப்படுவோர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், அவர்களைக் கைதூக்கி விடும் முயற்சிகளில் ஒன்றாக, தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் இவர்களுக்குத் தனி உள்ஒதுக்கீடு வழங்கிட, அரசுக்கு பரிந்துரை செய்ய உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற நீதியரசரைக் கொண்ட ஒரு நபர் குழு அமைப்பது என்றும ், அந்தக் குழுவின் அறிக்கையை 6 மாத காலத்திற்குள் பெற்று அதை நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்பது என்றும ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், அருந்ததியர் சமுதாயத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் கொண்ட ஒரு நபர் குழு 25/03/2008 அன்று அமைக்கப்பட்டது.

நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம ், அருந்ததியருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அனைத்துப் பரிமாணங்களையும் விரிவான முறையில் ஆய்வு செய்து, அருந்ததியர் எனப்படுவோருள் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய பிரிவினரையும் உள்ளடக்கி, அவர்களின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில், ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 3 விழுக்காடு உள்ஒதுக்கீட்டினை வழங்கலாம் என்று பரிந்துரை செய்து, அறிக்கை ஒன்றினை நேற்றைய தினம் (22/11/2008) தமிழக அரசிடம் அளித்துள்ளார்.

அருந்ததியர் சமுதாயத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற இந்தப் பரிந்துரை அறிக்கையைப் பரிசீலனை செய்து முடிவெடுப்பதற்காக 27.11.2008 (வியாழக்கிழமையன்று) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், அருந்ததியர் சமுதாயத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்குவதற்குச் சட்டரீதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அருந்ததியர் சமுதாயத்தினர் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்து வாழ்வாதாரங்களை வலுப்படுத்தி, வளப்படுத்திக் கொள்வதற்காக, அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வரும் கழக அரசு, கருவில் இருக்கும் காலம் முதல் கடைசிக் காலம் வரை வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் அரசின் நிதியுதவி பெற்று அவர்கள் நிம்மதியாக இருப்பதற்குத் துப்புரவுப் பணியாளர்கள் நலவாரியம், காலணி, தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நலவாரியம் என நலவாரியங்களைத் தோற்றுவித்து பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெற வழி வகுத்துள்ளது.

அவற்றின் தொடர்ச்சியாக, அவர்களுக்கு வழங்கப்படவுள்ள, இந்தியாவிலேயே முன்னோடியானதும், வரலாற்றுச் சிறப்புள்ளதுமான, தனி இடஒதுக்கீடு என்னும் நடவடிக்கையின் காரணமாக சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் அவர்கள் தலை நிமிர்ந்து வாழ வழி பிறந்துள்ளது.

இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments