Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச பேரு‌ந்து பயண அ‌ட்டை : மு.க. ஸ்டாலின் வழங்கினார்!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (13:40 IST)
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் உட‌ல் ஊனமு‌ற்ற மாணவ‌ர்களு‌க்கு இலவச பேரு‌ந்து பயண அ‌ட்டையை உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமை‌ச்ச‌ர் மு.க. ‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழகஅரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்த ி‌க ்குறிப்பில ், " இயல ா குழந்தைகள் பேச்சுத்திறன் பயிற்சியும், உடல்வள நலப்பயிற்சியும் பெறுவதற்கு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி மையங்களுக்கு சென்று வர மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாண வ, மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர் ஒருவருக்கும் பேருந்தில் பயணம் செய்ய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் என்றும், இச்செலவினத்தை சென்னை மாநகராட்சி ஏற்கும் என்றும் சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் தொடக்கமாக அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுத்திறன் பயிற்சியும், உடல்வள பயிற்சியும் பெற உள்ள 22 மாணவர்களுக்கும், மாணவர்களுடன் பயிற்சி மையத்திற்கு சென்றுவர அவர்களுடைய பெற்றோர் ஒருவருக்கும் இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவர்களுடன், அவர்களது பெற்றோர்களும் மனவள பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சிகள் அறிந்து மாணவர்கள் மனவள பயிற்சிகள் மேற்கொள்ள உறுதுணையாக அமைந்திடும் வகையில் பெற்றோர்களுக்கு சென்னை மாநகராட்சி இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் உடல் ஊனமுற்ற மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் சகஜமாக இணைந்து பழகும் நட்பு சூழல்ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் உடல் ஊனமுற்ற மாண வ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதுவரை சென்னை மாநகராட்சி மூலம் 6,397 பள்ளி மாண வ, மாணவியர்கள் உடல் ஊனமுற்றோர்கள் என்று கண்டறியப்பட் டுள்ளனர். அடுத்த கட்டமாக தகுதியானவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும ்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments