Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை : முத‌ல்வ‌ரிட‌ம் மத்திய அரசு உறுதி!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:35 IST)
சி‌றில‌ங் க கட‌ற்படை‌யினரா‌ல ் ‌ சிறை‌பிடி‌க்க‌ப்ப‌ட் ட புது‌க்கோ‌ட்ட ை மாவ‌ட்ட‌ம ் ஜெகதா‌ப்ப‌ட்டின‌ம ் ‌ மீனவ‌ர்கள ை ‌ ஓரிரு நாட்களில் விடுதல ை செ‌‌ய்வத‌ற்கா ன ஏ‌ற்பாடுக‌ளி‌ல ் இலங்கையில் உள்ள இந்திய தூதர் தொடர்ந்து ஈடுபட்டிரு‌ப்பதா க ம‌த்‌தி ய அரச ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க தமிழக அரசு இ‌ன்ற ு வெளியிட்டுள்ள செய்த ி‌ க்குறிப்பில ், " புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா‌ப்ப‌ட்டின‌ம ் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துச் சென்றனர்.

உடனடியாக அவர்களை மீட்பதற்காக முயற்சியில் ஈடுபட்ட முத‌ல்வ‌ர ் கருணாநிதி, மத்திய அயலுறவு‌த ் துற ை இணை அமை‌ச்ச‌ர ் அகமதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தமிழக மீனவர்களை மீட்பது குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலையில் மத்திய அமை‌ச்ச‌ர ் அகமது, முதல்வ‌ர ் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது நமது மீனவர்கள் இலங்கைக் கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலே சென்று மீன் பிடித்ததால், இலங்கை ராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

ஓரிரு நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில் இலங்கையில் உள்ள இந்திய தூதர் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார ்" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments