Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடு‌‌ம்ப‌த்‌தி‌ல் குழ‌ப்ப‌ம் ‌விளை‌வி‌க்க முய‌ற்‌சி : கலா‌நி‌தி, தயா‌நி‌தி ‌மீது கருணாந‌ி‌தி தா‌க்கு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (17:20 IST)
ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் கரு‌‌த்து‌க்க‌ணி‌ப்பு எ‌ன்ற பெய‌ரி‌ல் தோழமை க‌ட்‌சி‌க‌ள், குடு‌ம்ப‌த்து‌க்கு‌ள் குழ‌‌ப்ப‌ம் ‌‌விளை‌வி‌க்க முய‌‌ன்றதாக கலா‌நி‌தி மாற‌ன், தயா‌நி‌தி மாற‌ன் ‌மீது முத‌ல்வ‌ர் கருணாநிதி கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்க ை:

webdunia photoFILE
மடியில் தவழ்ந்தும் மார்பில் விளையாடியும் - தோளில் தொத்தியும் நான் தூக்கி வளர்த்த பிள்ளை - அண்ணாவின் அன்புக்கும் என் உயிருக்கு உயிராகவும் விளங்கி - இன்னும் வாழ வேண்டிய வயது இருப்பினும் என்னை மீளா சோகத்தில் ஆழ்த்தி விட்டு, மறைந்து விட்ட மாறன்; அவர் பெற்ற பையன்கள் கலாநிதி தயாநிதி எனும் புகழ், அன்பு என்ற செல்லப் பெயர் கொண்ட இந்த இருவரும் அவரின் வழித் தோன்றல்களாக என்னிரு கரம் பிடித்துத் துளிர்த்துத் தழைத்த காட்சியை அனைவரும் அறிவீர்கள்.

ஆனால் வயது வந்த பிறகு; மாறன் எனும் பாசமிகு மதிற் சுவர் தாண்டி இருவரும் எனக்கெதிராக கிளம்பிடுவர் என்றோ; பகை பாராட்டுவர் என்றோ நான் கனவிலும் கருதிடவில்லை.

அவர்தம் போக்கும் நோக்கும், அவர்கள் "பூமாலை'' எனும் "கேசட்'' வியாபாரம் நடத்தியபோது இருந்ததை விட; அதன் வளர்ச்சி "சுமங்கலி கேபிள் விஷன்'' ஆக, "சன் டி.வி.''யாக, "சன் நெட்வொர்க்'' ஆக வளர்ந்து மாறியதும் -மாறனின் பிள்ளைகளும் மாறிவிட்டார்கள்.

முரசொலி மாறனும் முரசொலி அலுவலக முகப்பில் சிலையாக நின்று விட்டார். அதன் பிறகுதான் "சன் டி.வி.'' பங்குத் தொகை பிரிக்கப்பட்டு எமக்குக் கிடைத்த பங்குத்தொகை 100 கோடி ரூபாயை துணைவியர்க்கும் பிள்ளைகள் பெண்களுக்குமாக பங்கிட்டுக் கொண்டோம்.

சன் தொலைக்காட்சி முறையாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று அதனைப் பிரிக்க வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது? எதற்காக அவ்வளவு அவசர அவசரமாகப் பிரிக்க முடிவெடுத்தார்கள்? சன் தொலைக்காட்சியின் லாபம் எவ்வளவு? அதன் கணக்கு எவ்வளவு? என்று எந்த விவரத்தையும் நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அதற்கான பங்கீடு நடைபெற்ற போது கூட அதில் பங்கு பெற்றிருந்தோர், அதிலே கையெழுத்திட முன் வராத நிலையில் நான் தான் அவர்களையெல்லாம் சமாதானம் செய்து, அந்தப் பங்கீடு எந்தவிதமான கசப்புணர்வுகளும் ஏற்படாத வகையில் நடந்தேறிட உதவி செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். பின்னர் "தினகரன்'' இதழையும் இவர்கள் வாங்கி விட்டார்கள்.

அதன் தொடர்பாக 7-5-2007 அன்று "தினகரன்'' நாளேட்டில் கருத்துக் கணிப்பு ஒன்று வெளிவரப் போகிறது என்று என் கவனத்திற்கு வந்தபோது, தேர்தல் இல்லாத நேரத்தில் எதற்காக இந்தக் கருத்துக் கணிப்பு, மெகா சர்வே என்றெல்லாம் தேவையற்ற பிரச்சினையைக் கிளப்ப வேண்டும், அது தேவையில்லை, அந்தக் கருத்துக் கணிப்பை தயார்படுத்திவிட்டாலுங்கூட, அதனை வெளியிட வேண்டாமென்று இரண்டு மூன்று முறை நான் நேரிலேயே தெரிவித்திருந்தேன்.

இது துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி இருவருக்கும் கூடத் தெரியும். ஆனால் என் யோசனையை ஏற்றுக் கொள்ளாமல், 2007-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் தேதிய "தினகரன்'' நாளேட்டில் அந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் சார்பில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், "தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர் யார்?'' என்ற தலைப்பிலே கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்பில் தயாநிதிமாறனுக்கு 64 ‌‌ விழு‌க்காடு பேர் ஆதரவு என்றும், நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரத்துக்கு 27 ‌‌விழு‌க்காட ு பேர் ஆதரவு என்றும், டி.ஆர். பாலுவிற்கு 7 ‌‌விழு‌க்காட ு பேர் ஆதரவு என்றும், டாக்டர் அன்புமணிக்கு 1 ‌‌விழு‌க்க ா‌ட்டின‌ர ்தான் ஆதரவு என்றும் மக்கள் ஆதரவு இருப்பதாக தினகரன் ஏட்டில் வெளியிட்டார்கள்.

இரண்டு மூன்று கட்சிகளின் சார்பில் மத்தியிலே கூட்டணியில் மந்திரிகள் இருக்கும்போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இல்லாத ஆதரவு தயாநிதி மாறனுக்கு இருப்பதைப் போலக் குறிப்பிடும் இந்தக் கருத்துக் கணிப்பு தேவைதானா?

குறிப்பாக, தோழமைக் கட்சியிலே இடம் பெற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு 1 விழு‌க்க ா‌ ட்டின‌ர்தான் ஆதரவு என்று வெளியிடுவது சரியான முறைதானா? அதன் காரணமாக அந்தக் கட்சியிலே உள்ளவர்கள் தி.மு. க. வின்பால் எந்த அளவிற்கு கோபம் அடைய நேரிடும்? அதே நேரத்தில் அகில இந்திய அளவில் பாராட்டுப் பெற்று நீண்ட அனுபவம் பெற்றுள்ள நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரத்திற்கு 27 விழு‌க்க ா‌ ட்டின‌ர்தான் ஆதரவு என்றும், தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறனுக்கு மட்டும் 64 விழு‌க்க ா‌ ட்டின‌ர் ஆதரவு என்றும் வெளியிட்டால், காங்கிரஸ் கட்சியிலே உள்ள தோழர்கள் அதனை வரவேற்பார்களா?

எதற்காக வீண் வம்பை வளர்க்க வேண்டும்? தி.மு. க. சார்பிலேயே அமைச்சர்களாக உள்ள பாலுவிற்கு 7 விழு‌க்க ா‌ ட்டின‌ர்தான் ஆதரவு என்று எழுதுவதால் என்ன பயன்? இந்தக் கருத்துக் கணிப்பினை வெளியிட்டே இருக்கத் தேவையில்லை என்பது என் கருத்தாக மட்டுமல்ல, அப்போது தமிழகத்திலே உள்ள மூத்த அரசியல்வாதிகள் அனைவராலும் அந்தக் கருத்துக் கணிப்பு தவறாகக் கருதப்பட்டது.

இந்தச் செய்தியைப் படித்து விட்டு பெரிதும் வருந்திய நான், நேரடியாக கலாநிதி, தயாநிதி இருவரையும் அழைத்து, முதலில் இந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடுவதை நிறுத்துங்கள் என்று கோபமாகவே சொன்னேன். என்னுடைய கோபம் அலட்சியப்படுத்தப்பட்டு என் கருத்தும் அப்போது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

9-5-2007 அன்று "தினகரன்'' இதழில் முதல் பக்கத்தில் தலைப்பிலே கட்டம் கட்டி ஒரு செய்தி - "கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்? - 11ஆம் பக்கம் பார்க்க'' என்று தலைப்பிட்டு - மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்புக்கு தலைப்பே "கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும்?'' என்பதாகும்.

இதில் தமிழக அளவில் மு.க.ஸ்டாலின் தான் கலைஞரின் அரசியல் வாரிசாக வர வேண்டும் என்று 70 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ், மு.க.அழகிரிக்கு ஆதரவாக 2 ‌விழு‌க்கா‌ட்டினரு‌ம், கனிமொழிக்கு ஆதரவாக 2 ‌விழு‌க்கா‌ட்டினரு‌ம் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டார்கள். முதல் கருத்துக் கணிப்பு தோழமைக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கானது என்றால், இந்தக் கருத்துக் கணிப்பு குடும்பத்தாருக்கு மத்தியிலேயே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

மு.க.அழகிரி ஆனாலும், கனிமொழி ஆனாலும் எனக்கு அரசியல் வாரிசாக வருவதற்கான முயற்சியோ, அறிவிப்போ எதிலும் ஈடுபடாத நிலையில், தேவையே இல்லாமல் வீண் வம்பினை விலை கொடுத்து வாங்குவதைப் போல அவர்களுக்கு தமிழகத்திலே இரண்டு ‌ விழு‌க்கா‌ட்டின‌ர்தா‌ன் ஆதரவு என்பதாக செய்தி வெளியிட்டார்கள்.

இதிலே கூட தயாநிதி மாறன், இந்தப் போட்டியில் தன் பெயரைத் தவிர்த்துக் கொண்டு, அவருக்கு எத்தனை ‌விழு‌க்‌காட ு ஆதரவு என்பதையே வெளியிடாமல், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்ற என் பிள்ளைகளுக்கு மத்தியிலேயே ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அப்போதெல்லாம் கூட, நான் இந்த ஏற்பாடுகள் எல்லாம் உள்நோக்கத்துடன் திட்டமிட்டுத் தான் செய்யப்படுகிறது என்று நினைத்தது கிடையாது.

மு.க. அழகிரிக்கு இரண்டு ‌விழு‌க்கா‌ட்டின‌ர ் தான் தமிழகத்திலே ஆதரவு என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதும், அதற்காக அழகிரி கோபமடையாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் பொறுமையாக இருப்பார்களா? அதனால், அழகிரிக்கே தெரியாமல், அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையிலே ஈடுபட்டார்கள். அந்த வன்முறைச் செயலில் அழகிரிக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது என்றபோதிலும், அந்த வன்முறைச் சம்பவம் நடைபெறவும், அதனால் மூன்று அப்பாவி அலுவலர்கள் பலியாகவுமான நிலைமை ஏற்பட்டது.

கருத்துக் கணிப்பு வெளியிட வேண்டாமென்று நான் எத்தனை முறை சொன்னேன்? என் வார்த்தை கேட்கப்பட்டதா? அதன் பலன் என்னவாயிற்று? எதற்காக ஸ்டாலினை உயர்த்தி வைத்து, அழகிரியையும், கனிமொழியையும் மட்டம் தட்ட நினைக்க வேண்டும்? ஒரே குடும்பத்திற்குள் இப்படிப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சி நல்லது தானா?

மு.க.அழகிரியை அத்துடனாவது விட்டார்களா? 10-5-2007 தேதிய தினகரனில் - "கருத்துக் கணிப்பை சகிக்க முடியாமல் மு.க.அழகிரி வெறியாட்டம் - ரவுடிகளை ஏவித் தாக்குதல்'' என்ற தலைப்பிலே செய்தி வெளியிட்டார்கள்.

குடும்பத்திற்குள்ளே சண்டையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல், அன்று முதல் இன்று வரை தினகரன் நாளேட்டில், என்னுடைய தலைமையிலே உள்ள தி.மு.க. அரசையும், அரசின் காவல் துறையையும் மற்றத் துறைகளையும் எந்த அளவிற்கு மோசமாக - ஏன் எதிர்க்கட்சி ஏடுகளை விட மோசமாக விமர்சனம் செய்து செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள்?

மே திங்கள் 11-ஆம் தேதி கொட்டை எழுத்துக்களில் "அழகிரி அட்டூழியத்திற்கு முடிவு கட்டுங்கள்'' என்றும் "நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டேன்'' என்றும் கலாநிதி மாறன் கூறியதாக தினகரன் நாளேட்டில் எழுதப்பட்டிருந்தது. அதே கருத்துக் கணிப்பின் தொடர்ச்சியாக "எந்த அரசுத் துறை அதிகாரிகள் அதிக லஞ்சம் வாங்குகிறார்கள்?'' என்ற தலைப்பில் - என் பொறுப்பிலே உள்ள காவல் துறையில்தான் அதிக அளவில் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று முடிவு வெளியிட்டார்கள்.

தினகரன் அலுவலகத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10-5-2007 அன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, நான் அளித்த பதிலின் இறுதிப் பகுதி வருமாறு:-

09-05-2007 அன்று காலை 9.30 மணிக்கு, மதுரையில் சிலர் கருத்துக்கணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, தினகரன் இதழை தீயிட்டுக் கொளுத்திவிட்டு கலைந்து சென்றனர்.

இது சம்பந்தமாக, தலைமைக் காவலர் 830 ரகுநாத கலைமணி என்பவரின் புகாரின் பேரில், ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண்.224/2007 பிரிவு 147, 148, 285 இ.த.ச.படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் கோபிநாதன், குமார், சேகர், பாண்டி, அருணாசலம் ஆகிய ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், காலை 10.00 மணிக்கு சரவணன் என்பவர் தலைமையில் சிலர் தினகரன் அலுவலக வளாகத்திற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து, கற்களை வீசி, கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இது சம்பந்தமாக, தலைமைக் காவலர் 1380 மார்டின் வில்லியம் என்பவரின் புகாரின் பேரில், ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண். 225/2007 பிரிவு 147, 148, 332 இ.த.ச.படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அழகுராஜா, பிரேம்குமார் என்ற இருவர் இதுவரை கைதாகியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, தினகரன் அலுவலகத்திற்கு ஊமச்சிக்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், தலைமையில் நான்கு உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவலர்களை அனுப்பி, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

சுமார் 11.30 மணிக்கு, சிலர் டாடா சுமோ காரில் வந்து காவல்துறை பாதுகாப்பை மீறி தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து பெட்ரோல் அடைக்கப்பட்ட பாட்டில்களை வீசி, கண்ணாடி மற்றும் அலுவலகப் பொருட்களை தீ வைத்து சேதப்படுத்தி, தப்பி சென்றுவிட்டனர். உடனடியாக, காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயினை அணைத்தார்கள். தீ மற்றும் புகையில் சிக்கி தினகரன் அலுவலக ஊழியர்கள் கோபிநாத், வினோத் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் மூச்சு திணறி இறந்துள்ளனர்.

இது சம்பந்தமாக காவல் உதவி ஆய்வாளர் ஆலடியான் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், இது சம்பந்தமாக, தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் முத்துபாண்டியன் கொடுத்த புகாரும், இதனுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் டைகர் பாண்டி, பாட்சா, சரவணன், மாரி மற்றும் பிரபு ஆகிய ஐவர் இதுவரையில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிரிகள் பயன்படுத்திய டாடா சுமோ வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மற்ற எதிரிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில், பேருந்துகள் மீது கற்களை வீசி, கண்ணாடிகளை சேதப்படுத்தியது சம்பந்தமாக, கரிமேடு, ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரம் ஆகியவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் 7 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுவரை 82 பேர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து தினகரன் பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் சன் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கி, இது சம்பந்தமாக எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு, அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை சார்பில் அறிக்கை எனக்குத் தரப்பட்டுள்ளது.

இதனைச் சொல்லும்போது - இந்த நிகழ்வுகளில் இதிலே என்னுடைய குடும்பத்தினரையும் சம்பந்தப்படுத்தியிருக்கிற நிலையில் - இந்த வழக்கினை தமிழகப் போலீசார் விசாரிப்பதற்குப் பதிலாக - மத்திய அரசு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து, மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்தும், மூன்று பேர் இறந்தது குறித்தும் சி.பி.ஐ.யைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கிறேன்.

தமிழக அரசின் சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் தலைமைச் செயலாளர் மூலமாகக் கடிதம் எழுதப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''

இவ்வாறு சட்டமன்றத்திலே நான் விரிவாக எடுத்துரைத்த பிறகும், இதனைத் தொடர்ந்து நாள் தவறாமல் அழகிரிக்கு சம்மந்தமே இல்லாத பிரச்சினைகளிலே எல்லாம் கூட அவர் மீது பழியைப் போட்டும் - அதேபோல் மத்தியிலே தயாநிதி மாறன் மந்திரியாக பொறுப்பேற்றிருந்த துறையின் அமைச்சராக தி.மு.க. சார்பில் மந்திரியாக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு எதிராகவும் - தமிழகத்திலே மின் துறை அமைச்சருக்கும், வேறு குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராகவும் எந்த அளவிற்கு மோசமாக செய்தி வெளியிட முடியுமோ அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதுபற்றி பல முறை நான் வீட்டிலே உள்ளவர்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் தெரிவித்தும் கூட அதனைக் கேட்கவில்லை. "தாத்தா - பேரன்'' என்ற முறையில் நான் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் நான் தலைமை வகித்து நடத்திடும் கட்சியையும் ஆட்சியையும் வேண்டுமென்றே தொடர்ந்து பழி சுமத்தினால் அதனை நான் தாங்கிக் கொள்ள முடியுமா?

அதுவும் கழகத்திற்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்திற்குள்ளேயே இருந்து கொண்டு, அந்தக் கழகத்தைப் பற்றி இழித்தும் பழித்தும் செயல்படுவதென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதனால்தான் சன் தொலைக்காட்சி அமைந்திருந்த அந்த அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டுமென்று கழகப் பொருளாளர் மூலமாகச் சொல்லி அனுப்பப்பட்டது.

அப்போது கூட 5-2-2008 அன்று சன் தொலைக்காட்சி சார்பில் தி.மு. க. அறக்கட்டளை தலைவராகிய எனக்கு எழுதிய கடிதத்தில் ஆறு மாத காலம் தொடர்ந்து அங்கேயிருப்பதற்கு அனுமதிக்கக் கேட்டிருந்தார்கள். அதையும் ஏற்றுக் கொண்டு அவ்வாறே கால அவகாசமும் தரப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

இவ்வளவிற்கும் பொறுமையாக இருந்து செயல்பட்ட பிறகும், தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த இடத்தை 5-7-2008 அன்று காலி செய்து விட்டு செல்லும்போது என்ன செய்தார்கள்? அந்தக் கட்டிடத்தையே புனரமைப்பு செய்ய வேண்டிய அளவிற்கு மின்சார "ஒயர்கள்'' எல்லாம் தாறுமாறாக அறுக்கப்பட்டும், குளியல் அறையிலே உள்ள சாதனங்கள் எல்லாம் உடைக்கப்பட்டும் சுவர்களையும் நாசம் செய்து விட்டுச் சென்றார்கள்.

இந்தக் கொடுமையான காட்சியை போய்ப் பார்த்து விட்டு வருமாறு பொருளாளர் அவர்களையும், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் மற்றும் ‌ தி.மு.க. முன்னோடிகள் சிலரையும் அனுப்பிவைத்தேன். அவர்களும் என்னுடன் சேர்ந்து கண் கலங்கினர்!

இவ்வாறு முத‌ல்வ‌ர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments