இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தும்வரை தமிழத்தில் போராட்டம் தொடரும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற ு ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை" என்று குற்றம்சாற்றினார்.
இதைக் கண்டித்த ு, வரும் 25 ஆம ் தேதி தமிழகம் முழுவதும், மத்திய அரசு அலுவலகங்கள் முன் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் பங்கேற்க உள்ளன. இந்த போராட்டத்தில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதில் அங்கம் வகிக்கும் 80- க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய அமைப்புகளும் பங்கேற்கும் என்று கூறினார்.
இந்த மறியலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என்றும் இந்த போராட்டத்துக்குப் பிறகும் மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இலங்கையில் போரை நிறுத்தும்வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும் என்று கூறிய அவர், தமிழகத்தில் பெரிய கட்சிகள் எனக் கூறப்படுபவை மக்கள் பிரச்னைக்கான போராட்டங்களுக்கு வருவதில்லை என்றும் குற்றம்சாற்றினார்.
காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ள கட்சிகள் என்றும் அவர்கள் இந்த மறியலில் பங்கேற்பர் என எதிர்பார்க்க முடியாது என்றும் ஆனால், அவர்கள் பங்கேற்காதது பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை என்றும் பழ. நெடுமாறன் கூறினார்.